இந்தியத் திரை உலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாகவும் திகழும் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கடைசியாக துல்கர் நடிப்பில் வெளிவந்த குருப் திரைப்படமும் இந்தியாவில் 5 மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான CHUP - THE REVENGE OF ARTIST  மற்றும் மலையாளத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சல்யூட் திரைப்படமும் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

முன்னதாக முன்னணி நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் இயக்குனராக களமிறங்கும் ஹே சினாமிகா படத்திலும் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடிக்க நக்ஷத்ரா நாகேஷ் மற்றும் RJ விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் கிலோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ஹே சினாமிகா படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ஹே சினாமிகா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அசத்தலான ஹே சினாமிகா ஃபர்ஸ்ட் லுக் இதோ...