வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சிங்க முக மாஸ்க் அணிந்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அந்த “கொள்ளையன் அதிரடியாக கைது செய்யப்பட்டது எப்படி?” என்று போலீசார் விளக்கி உள்ளனர்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையை வழக்கம் போல் கடந்த 15ஆம் தேதி இரவு 10 மணி அளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். மறுநாள் காலை அந்த கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டிருப்பதைக் கண்டு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

அந்த கடையில் இருந்து தங்க வைர நகைகள் அதிரடியாக கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக, இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், துளையை பார்வையிட்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

நகைக் கடையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவு துளை போடப்பட்டு இருப்பதும், அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

இவற்றுடன், 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம்  வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, மோப்ப நாய்கள் கொண்டும் கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்த போலீசார், 
இது தொடர்பா கடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “கடையில் மொத்தமாக 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றை கொளையர்கள் ஸ்ப்ரே அடித்து மறைத்துவிட்டு கொள்ளையடித்ததாகவும்” போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 

இந்த நகை கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு “வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக” காவல் துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டீக்காரமன். பள்ளிகொண்டாவை அடுத்து உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான டீக்காரமன் என்ற இளைஞர் தான், தனி ஒருவனாய், ”நகைக்கடையில் திருடியது எப்படி?” என்று, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

அதாவத, “சொகுசாக வாழ ஆசைப்பட்ட டீக்காராமனுக்கு பெரிய கொள்ளை சம்பவத்தை செய்து வாழ்வில் செட்டிலாகிவிட வேண்டும்” என்பதை தனது லட்சியமா வைத்திருக்கிறார். 

“அதற்காக, நீண்ட நாட்களாக பல திட்டங்களை தீட்டிய அந்த இளைஞன், இறுதியில் நகைக்கடையில் திருடுவது என முடிவு செய்து அதன்படி தேர்வுனா இடம் தான் தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை ஆகும்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், அவர் உதவிக்கு ஒரு கூட்டாளிகளை கூட தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை. அவன், முழுக்க முழுக்க நம்பியது யூடியூப் வீடியோக்களைத் தான். 

“யூடியூப் வீடியோக்களை பார்த்து சமையல் செய்வதைப் போல், நகைக்கடையில் கொள்ளையடித்திருக்கிறார்” என்றும், போலீசாரிம் அவன் கூறியிரக்கிறான்.

அதன்படி, “அந்த நகை கடைக்கு உள்ளேயும், வெளியேயும் நீண்ட நாட்களாக நகைக்கடையை நோட்டம் விட்ட டீக்காராமன், அந்த கடையின் பின்புறம் உள்ள சுவரை துளையிட்டு உள்ளே செல்ல திட்டம் போட்டிருக்கிறான். 

அப்போது, சுவரை துளையிடும் போது அங்கு சத்தம் வராமல் இருக்க சுவரை துளையிடுவது எப்படி என்று, யூடியூப் வலைத்தளத்தில் உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு, கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் அந்த கடையின் சுவரை துளையிட்டு உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறான்.

இந்த கொள்ளை சம்பவத்திற்காக, வெறும் 10 நாட்களை எடுத்துக்கொண்ட அந்த கொள்ளையன், அங்கிருந்த கடையின் காவலாளிகளுக்கு தெரியாமல் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக சுவரை துளையிட்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

இவற்றுடன், கொள்ளையடிக்கப்படும் தங்கத்தை எப்படி உருக்குவது என்றும், அவன் யூடியூபில் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டதும், அதற்கு தேவையான மூலப் பொருட்களையும் இயந்திரங்களையும் வாங்கி வைத்துக்கொண்டதும்” விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “தனது அடையாளங்களை மறைத்து திருடிய நகைகளை, ஆளில்லா சுடுகாட்டில் புதைத்து வைத்து விட்டால், யாராலும் தன்னை கண்டுபிடிக்க முடியாது என்று யோசித்த அந்த கொள்ளையனைத் தான், போலீசார் மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். போலீசாரின் விசாரணையில் தான், “எப்படி திட்டம் போட்டு திருடினேன்?” என்று, தனது வாக்குமூலத்தை அவன் கூறியதும், போலீசார் அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டனர். இது தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.