தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கௌதம் கார்த்திக் அடுத்ததாக சிலம்பரசனுடன் இணைந்து பத்துதல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பத்துதல திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

முன்னதாக இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் அழகான கிராமத்து குடும்பத் திரைப்படமாக தயாராகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா கதாநாயகியாக நடிக்க, இயக்குனரும் நடிகருமான சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், மௌனிகா, சரவணன், சினேகன், ஜாக்குலின், மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

ஆனந்தம் விளையாடும் வீடு படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் & ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் SNEAK PEEK வீடியோ வெளியானது. அந்த வீடியோ இதோ...