மறைந்த மலையாள இயக்குனர் சச்சி இயக்கத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்து, கடந்த ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக பீம்லா நாயக் திரைப்படம் தயாராகியுள்ளது .

முன்னணி தெலுங்கு இயக்குனரான  இயக்குனர் சாகர்.கே.சந்திரா இயக்கத்தில் உருவாகும் பீம்லா நாயக் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகை நித்யா மேனன் & இயக்குனர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . 

இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் வசனங்களை எழுத, சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்  தமன்.S இசையமைத்துள்ளார் . ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார்.அடுத்த ஆண்டு பொங்கல்/சங்கராந்தி வெளியீடாக ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருந்த பீம்லா நாயக் படத்தின் பாடல்கள் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்   பீம்லா நாயக் திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.RRR மற்றும் ராதே ஷ்யாம் திரைப்படங்களின் ரிலீசை கருதி பீம்லா நாயக் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி உலகெங்கும் பீம்லா நாயக் திரைப்படம் ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.