' ஜெய் பீம் ' திரைப்படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கக் கூடாது என்ற வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

kamarajநடிகர் சூர்யா, தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் பட சர்ச்சையால் நடிகர் சூர்யாவை வன்னியர் இன மக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் வன்னியர் மக்களை இழிவு படுத்தும் விதமாக ஜெய் பீம் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் வன்னியர்களின் மனம் புண்பட்டுவிட்டது என்றும் ரு.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும்  தெரிவித்தார். இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ்க்கு  நடிகர் சூர்யா பதில் அறிக்கையாக எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத  யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதியாகத்தான் நடந்து கொல்கிறாரகள் இதில் சாதி இன் மதம் மொழி பேதம் இல்லை சகமனிதனின் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தருகிறேன் சமத்துவம் சகோதரத்துவம் பெறுக அவரவர் வழியில் தொடர்ந்து செயல் படுவோம் என்று புரிதலுக்கு நன்றி என சூர்யா அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு கொடுத்துவருகினறனர். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் அதனை தொடர்ந்து நடிகை ரோகினி, இயக்குனர் பாரதிராஜா போன்ற திரை பிரபலங்கள் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கினறனர். எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் நாடு முழுவதும் நடிகர் சூர்யாவிற்கு உள்ளது. வன்னியர்கள்  விமர்சனங்களை தொடர்ந்து மக்கள் சமூக வலைத்தளங்களில் #istand withsurya  என்ற hashtag-யிட்டு மக்கள் தங்கள் ஆதரவுகளை சூர்யாவிற்கு  தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்  காமராசர் அவர்களின் நினைவில்லத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியதாவது:  முதலமைச்சர் உத்தரவுப்படி காமராசர் வசித்த இல்லத்தில் அரசின் சார்பாக எடுக்கப்படும் பராமரிப்பு பணி குறித்து இன்று நேரில்  கேட்டறிந்தோம்.  காமராசர் நினைவு இல்லத்தை பராமரிக்க அரசு சார்பில் ஏற்கனவே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரிடம் பேசி மேலும் கூடுதல் நிதியை  பெற உள்ளோம் என தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து காமராசர் இல்லத்தின் உள் பகுதியின்  மேற்கூரைஙள் சிதைந்துள்ளன.  அவற்றை சரி செய்து வர்ணம் பூச உள்ளோம். மழையிலும் சிதையா வண்ணம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். 
தமிழகம் முழுவதும் அமைந்துள்ள நினைவு இல்லங்களில் , துறை சார்பில் இரண்டொரு நாளில் உயர் அலுவலர்கள்  ஆய்வு செய்வர் , ஆய்வு செய்து புனரமைப்பு பணி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்ப்படும். 
இங்கிருங்கும் காமராசர் தொடர்பான புகைப்படங்களை பொக்கிசங்கள்.  இப்புகைப்படங்களை புதுப்பிக்கபட  உள்ளோம் எனறு தெரிவித்தார்.

மேலும் சென்னையில் முத்துராமலிங்க தேவருக்கு ஏற்கனவே சிலை  அமைக்கப்பட்டுள்கது. சென்னையில் முத்துராமலிங்கம் அவர்களுக்கு நினைவில்லம் அமைப்பது  தொடர்பாக தேவையான இடத்தை ஆய்வு செய்து, நிதி நிலைக்கு ஏற்ப முடிவு செய்வோம் என்று கூறினார் .

இந்நிலையில்  'ஜெய் பீம் ' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அந்த படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக  பரிசீலிக்க கூடாது என வன்னியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  இப்பட பிரச்சனை தொடர்பாக முதல்வருடன் கலந்துபேசி சுமூகமான சூழலை ஏற்படுத்துவோம். வன்னியர் சங்கத்தின் கோரிக்கை நியாயமாக இருந்தால் பரிசீலிப்போம் , அதே வேளையில் திட்டமிட்டு சுமந்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்போம்  " என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார் .