மனைவியின் கள்ளக் காதலை கண்டித்த கணவனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற சம்பம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்து உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்த 44 வயதான ராஜேஷ் கண்ணன், அந்த பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். ராஜேஸ் கண்ணனுக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கிறார். 

அதே நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமிக்கும், ராஜேஸ் கண்ணனின் மனைவி மணிமேகலைக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியாக, இவர்களது கள்ளக் காதல் வாழ்க்கை கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கள்ளக் காதல் விசயம், எப்படியோ கணவன் ராஜேஷ் கண்ணனுக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை அழைத்துக் கண்டித்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் கண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அடிக்கடி குடும்ப சண்டை நடைபெறுவதை ராஜேஷ் கண்ணனின் மனைவி மணிமேகலை, தனது கள்ளக் காதலன் மலைச்சாமியிடம் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, தங்களது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் ராஜேஷ் கண்ணனை கொலை செய்ய மலைச்சாமி திட்டமிட்டு உள்ளார்.

திட்டமிட்டபடி, மலைச்சாமி ராஜேஷ் கண்ணன் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, ராஜேஷ் கண்ணன், தனது வீட்டின் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் 
நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்து உள்ளார். 

அப்போது, நள்ளிரவு இரவு நேரம் என்பதால், அங்கு யாரும் வரவில்லை. அந்த நேரம் பார்த்து ராஜேஷ் கண்ணன் படுத்திருக்கும் இடத்திற்கு வந்த மலைச்சாமி, அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து ராஜேஷ் கண்ணன் தலையில் போட்டு உள்ளார். இதனால், தூக்கத்திலிருந்து வலி தாங்க முடியாமல் கண் விழித்த ராஜேஷ் கண்ணன், வலி தாங்க முடியாமல் அலறி அடித்து சத்தம் போட்டு உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, தான் கொண்டு வந்த அரிவாளால் அவரை சரமாரியாக அவர் வெட்டி உள்ளார். இதில், அலறித்துடித்தவாறே ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, மலைச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

அதே நேரத்தில், அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜேஷ் கண்ணனின் தம்பி கதிரவன், தன் அண்ணனைப் பார்த்து உள்ளார். அவர், அங்கு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காணப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலைய போலீசாருக்கு இது தொடர்பாக அவர் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இந்த கொலை தொடர்பாகத் தம்பி கதிரவன் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக,  ராஜேஷ் கண்ணனை கொலை செய்த மலைச்சாமியை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தான், மணிமேகலையின் கள்ளக் காதல் விசயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.