11 வயது சிறுமிக்கு தோழியின் தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி தனது பெற்றோருடன் இருந்து, ஆன்லைன் மூலம் பாடம் படித்து வருகிறார்.

அத்துடன், இந்த கொரோனா வைரஸ் விடுமுறைக் காலத்தில் அருகில் இருக்கும் தனது பள்ளித் தோழியின் வீட்டிற்கு அடிக்கடி அந்த சிறுமி சென்று வந்து உள்ளார்.

அப்போது, அந்த வீட்டில் இருந்த தோழியின் தந்தை 44 வயதான சசிகுமார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பள்ளி மாணவி, இது குறித்து அழுதுகொண்டே வீடு திரும்பிய நிலையில், தனது பெற்றோரிடம் இது குறித்து முறையிட்டு உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் தோழியின் தந்தையான சசிகுமாரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அவரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சசிகுமாரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கும் பணிகளில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், உத்தரப்பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இருக்கும் நிகோஹி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவ, கடந்த 4 ஆம் தேதி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, தனக்கு நேர்ந்த பாலியல் அவலம் குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, உடனடியாக அங்குள்ள நிகோஹி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.