தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நேற்று முன்தினம் தொடங்கியது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான வளர்ப்பு யானைகளுக்கு ஆண்டு தோறும் நலவாழ்வு முகாம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் திங்கட்கிழமை முதல் 48 நாட்களுக்கு நடைபெறுகிறது.

elephant_refresh

இந்த முகாமில் உணவுக் கூடம், யானைகளுக்கான நடைபயிற்சி பாதை, குளிக்க வைக்கும் இடம் தயாராக உள்ளன. 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட முகாமிற்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதை சுற்றி தகரத்திலான தடுப்பு, சோலார் மின்வேலி, அணைந்து எரியும் வகையிலான மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 7 இடங்களில் கோபுரம் அமைக்கப்பட்டு காட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

இங்கு கொண்டு வரப்பட்ட யானைகள் உற்சாகமா குளித்து புத்துணர்ச்சி பெற்றன.

புகைப்படங்கள்: சிபி வீரா