எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து உருவான திரைப்படம் சக்ரா. இப்படத்தில் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் என்று விஷால் ட்ரைலரில் பேசிய வசனம் ரசிகர்களை கவர்ந்தது. 

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்கி முடித்துவிட்டது படக்குழு. தற்போது மாஸ்டர் படத்துக்குக் கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பை முன்வைத்து திரையரங்கிலேயே சக்ரா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. 

பிப்ரவரி 19-ம் தேதி சக்ரா வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. யுவன் ஷங்கர் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ஹர்லா ஃபர்லா பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதன் பிறகு படத்தின் Scream of Darkness என்ற தீம் இசை வெளியானது. 

இந்நிலையில் அம்மா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி செவிகளுக்கு விருந்தளித்து வருகிறது. சின்மயி மற்றும் பிரார்த்தனா இந்த பாடலை பாடியுள்ளனர்.  

விஷால் தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மிர்னாலினி ரவி, பிரகாஷ் ராஜ், கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடைசியாக மம்தா மோகன்தாஸ் படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.