சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வசிப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் அப்பா செல்லம். இந்நிலையில் மாமனார் இருக்கும் பகுதியிலேயே வசிக்க முடிவு செய்து போயஸ் கார்டனில் நிலம் வாங்கியிருக்கிறார்  நடிகர் தனுஷ். புது வீடு கட்ட இன்று காலை பூமி பூஜை நடந்தது. அந்த பூஜையில் ரஜினிகாந்த் தன் மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டார். 

பூமி பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா, ரஜினியை அடுத்து தனுஷுக்கும் போயஸ் கார்டன் அடையாளமாகிறது என ரசிகர்கள் கூறியுள்ளனர். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடித்துள்ள கர்ணன் படத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளார் தனுஷ். டப்பிங் பணி நிறைவடைந்ததை அவர் புகைப்படத்துடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கி வரும் டி43 படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பில் தனுஷ், மாளவிகா மோகனன் கலந்து கொண்டனர். அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் அமெரிக்கா கிளம்பவிருக்கிறார். இரண்டு மாதங்கள் அங்கு தான் இருக்கப் போகிறாராம். மே மாதம் நாடு திரும்பிய பிறகு மீண்டும் கார்த்திக் நரேன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். மேலும் கர்ணன் படம் வரும் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

தன் அண்ணன் செல்வராகவனுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணுகிறார். நானே வருவேன் என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தவிர சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி44 படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டிஎன்ஏ காம்போ மீண்டும் ஒன்று சேர்ந்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

dhanush new house at poes garden bhoomi pooja event pictures