தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இந்த ஆண்டு செல்வராகவனுக்கு ஸ்பெஷல் என்றே கூறலாம். செல்ல மகன் ரிஷிகேஷை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். தற்போது செல்வராகவனின் மூத்த மகளான லீலாவதி செல்வராகவன் youtube சேனல் ஆரம்பித்துள்ளார். இதுகுறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் செல்வராகவன் பகிர்ந்துள்ளார். 

சிறந்த இயக்குனரான செல்வராகவன், நடிகராகவும் களமிறங்கவிருக்கும் செய்தியை சமீபத்தில் அறிவித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சாணிக் காயிதம் படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வா. இந்த செய்தி சினிமா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார். 

சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த தகவலை வெளியிட்டார் செல்வா. தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனுஷ் வைத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் 12வது படம் இது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)