அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குறித்து ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சர்ச்சைகளுக்குப் பெயர் போனவராக இருந்து வருகிறார் என்பதற்கு, இந்த சம்பவமும் ஒரு சான்றாக இருக்கிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்று அதிபராகப் பதவி ஏற்றுள்ள நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் குறித்துத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், இந்த முறை அந்நாட்டின் பிரபல ஆபாசப்பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், ஒப்புதல் வாக்கு மூலமாக அதிர்ச்சி ஊட்டும் தகவலை தற்போது வெளியிட்டு உள்ளார்.

அவர் முன்னதாக, அதாவது “கடந்த 2006 ஆம் ஆண்டு டிரம்ப் என்னுடன் பாலியல் உடலுறவு வைத்துக் கொண்டார்” என்று, அந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், கடந்த 2018 ஆம் ஆண்டில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது, அமெரிக்காவில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் தரப்பினர் முற்றிலும் மறுத்து வந்தனர். 

இந்த நிலையில், “இது தொடர்பான தகவலை கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் நடைபெற்ற போது, வெளியே தெரிவிக்காமல் இருக்க, எனக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலரை, டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் வழங்கியதாகவும்” ஸ்டார்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார்.

இதுவும், அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை ஸ்டார்மி டேனியல்ஸை போலீசார் அப்போது அதிரடியாகக் கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, “என் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி, என்னை கைது செய்திருப்பதாக” தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், அவர் பதிவிட்டு இருந்தார்.

மேலும், அந்த பதிவில், “அரசியல் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர் என்னை கைது செய்திருப்பதாகவும்” ஸ்டார்மி டேனியல்ஸ் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான், ஸ்டார்மி டேனியல்ஸ் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் விதமாக, கருத்து கூறி உள்ளார்.

இந்த புகாரானது, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ் மீண்டும் சுமத்தி இருக்கிறார். 

டிரம்ப்பின் வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோஹன் என்பவருடன், ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் இன்டர்வியூ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, “கடந்த 2006 ஆம் ஆண்டில், நான் டிரம்புடன் உடலுறவு வைத்துக் கொண்ட 90 நொடிகள், எனது வாழ்நாளில் மிகவும் மோசமான தருணங்கள்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “அந்த மோசமான தருணங்களை நினைத்தால், என் மீதே எனக்கு அதிகப்படியான வெறுப்பு வருகிறது” என்றும், அவர் கூறியுள்ளார். 

இவற்றுடன், “டிரம்புடன் உடலுறவு மேற்கொள்ளப்பட்ட போது, அவர் எப்படி இருந்தார் என்பது பற்றியும் அந்த நிகழ்ச்சியில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் விரிவாகக் கூறியிருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், “கடந்த 2016 ஆம் ஆண்டில் என்னால் ஏற்பட்ட மன வேதனைக்காக, ஸ்டார்மியிடம் அவர் மன்னிப்பு கேட்டார்” என்றும், கூறப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குறித்து பிரபல ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது அந்நாட்டில் 
மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த செய்தி இணையத்தில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.