“பாலியல் தொழிலாளியிடம் சென்று பணம் தராமல் ஏமாற்றிய வாடிக்கையாளர்” குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பரபரப்பு தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வழங்கி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சுவிட்சர்லாந்து நாட்டில் தான், இப்படி ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில், பாலியல் தொழிலாளி ஒருவரிடம் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அவருக்குப் பணம் கொடுக்க மறுத்துவிட்டு, அவரிடம் சண்டைபோட்டு விட்டுச் சென்று உள்ளார். 

இதனால், ஆவேசமடைந்த அந்த பெண், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது அந்த பாலியல் தொழிலாளி, அந்நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமையில்லாத நிலை நிலவி வந்தது. 

அதற்குக் காரணம், பாலியல் தொழிலாளிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தம் என்பது, முறைகேடான என்று என்பதால், நீதித்துறை கருதி வந்ததே முதல் காரணம்.

இப்படியான சூழ்நிலையில், இந்நாட்டில் முதல் முறையாக சென் காலன் பெடரல் நிர்வாக நீதிமன்றத்தை, அந்த பாலியல் தொழிலாளி அணுகி இருக்கிறார். இதனை விசாரித்த அந்த பெடலல் நீதிமன்றம், ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியது. 

அந்த தீர்ப்பில், “பாலியல் தொழிலாளி ஒருவரிடம் சென்று விட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றிய சம்மந்தப்பட்ட அந்த நபருக்கு சுமார் 300 சுவிஸ் பிராங்க் அபராதம் விதித்து” அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.

மேலும், “சம்மந்தப்பட்ட அந்த வாடிக்கையாளருக்கு 50 நாட்கள் சிறைத் தண்டனையும் விதித்து” நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதே நேரத்தில், அந்நாட்டின் நீதித்துறையானது முதல் முறையாக பாலியல் தொழிலாளியின் வழக்கைக் கையாண்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. 

இவற்றுடன், பாலியல் தொழிலாளியின் பாதுகாப்பின் மீது செலுத்தும் அக்கறைக்கு, அந்நாட்டில் வசிக்கும் சக பாலியல் தொழிலாளிகள் நெகிழ்ச்சி அடைந்ததோடு, அந்நாட்டின் நீதித்துறைக்கு தங்களது நன்றியையும் தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக, பாலியல் தொழிலாளி தொடர்ந்த வழக்கில், சம்மந்தப்பட்ட வாடிக்கையாளருக்குச் சிறைத் தண்டனையும், அபராதம் விதிக்கப்பட்டுள்ள இந்த 
தீர்ப்பு, தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.