காதலனுடன் வாழ ஆசைப்பட்ட திருமணம் ஆன பெண் ஒருவர், தனது “கணவனையும், 3 வயது குழந்தையையும் வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்து உள்ள செருவாவிடுதி தெற்கு செட்டியார் தெருவைச் சேர்ந்த போத்தியப்பன் என்ற இளைஞர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, 24 வயதில் அருள் செல்வி என்ற மகள் இருக்கிறார். அருள் செல்வி, அங்குள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து நிலையில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞருக்கு வரன் பார்த்து, முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

இப்படியாக, முருகானந்தம் - அருள் செல்வி திருமணம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து உள்ளது. இவர்களது திருமணம் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டு இருந்தது. இவர்களது குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியாகத் தொடரவே, இந்த தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தற்போது 3 வயது ஆகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், போன வாரம் “மதுரையில் வசித்து வரும் தனது தோழியின் திருமணத்திற்குச் சென்று வருவதாக” தனது வீட்டில் கூறி விட்டு, அருள் செல்வி மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று உள்ளார். 

ஆனால், திருமணத்திற்குச் சென்ற அருள் செல்வி, அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை. அவரது செல்போன் எண்ணும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்து உள்ளது. 

இதனால், பயந்து பதறிப் போன அருள் செல்வியின் கணவன் முருகாந்தம், “தனது மனைவி அருள் செல்வியை காணவில்லை என்றும், கடுப்படித்துத் தாருங்கள்” என்றும், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இந்த புகார் தொடர்பாக, திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த தீவிரமான விசாரணையில், போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று கிடைத்து உள்ளது.

அதாவது, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள மருத்துவமனை அருகிலேயே பழக்கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அருள் செல்வியும் அந்த இளைஞரை காதலித்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. 

மேலும், அந்த இளைஞருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதனைத் தெரிந்துகொண்ட அருள் செல்வி, “தன்னை தொட்டு தாலி கட்டிய கணவரையும், தன்னுடைய 3 வயது குழந்தையையும் உதறித் தள்ளி விட்டு, தனது முன்னாள் காதலன் வீட்டில் அருள் செல்வி தஞ்சமடைந்து” இருக்கிறார். 

இந்த தகவலை அறிந்த போலீசார், அருள் செல்வியின் உறவினர்கள், கணவர் மற்றும் திருச்சிற்றம்பலம் போலீசார், மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் அருள் செல்வியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையின் போது, பேசிய அருள் செல்வி, “எனக்கு கணவரும் வேண்டாம், என் குழந்தையும் வேண்டாம். நான் மதுரையில் உள்ள எனது தோழி வீட்டில் வாழ்ந்து கொள்கிறேன்” என்று, திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அருள் செல்வியின் உறவினர்கள், அருள் செல்வியின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி, கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறியிருக்கிறார்கள். ஆனால், அருள் செல்வி கொஞ்சமும் இதற்கு மனம் இறங்கி வரவே இல்லை. இதனையடுத்து, அந்த பெண்ணிடம் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். ஆனாலும் பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து, அந்த பெண்ணின் விருப்பம் என்ன என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.