கடந்த 2018ஆம் ஆண்டு, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான  ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வெளி வந்தது. இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பல விருதுகளை பெற்றது. 


இந்நிலையில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசு வறுமையில் மிகவும் கஷ்டப்படுகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. நெல்லையில் வசித்து வரும் தங்கரசு, கொரோனா ஊரடங்கு காலத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில், ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையால் , அவருடைய வீடு முற்றிலும் சேதமடைந்துவிட்டது.

 
தினசரி உணவாக வெறும் கூழை மட்டுமே குடித்துவரும் தங்கரசு, வீட்டை சீரமைக்க பணமில்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், அவருடைய வீட்டை சீரமைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் முன் வந்துள்ளார். இந்நிலையில் முன்னணி தமிழ் திரைப்படத்துறையினர் தங்கரசுக்கு உதவ முன் வருவார்களா என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது.