தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக ஜொலித்து வருபவர் அர்ச்சனா.முதலில் சன் டிவியில் தொகுப்பாளினியாக அசத்தி வந்தார் அர்ச்சனா.தொடர்ந்து விஜய் டிவி,கலைஞர் டிவி என்று பல தொடர்களை தொகுத்து வழங்கி அசத்தி மக்கள் மனதில் தனி இடம்பிடித்துள்ளார் அர்ச்சனா.

பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கிய பிறகு அந்த தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளியினாக மாறினார் அர்ச்சனா.பல நிகழ்ச்சிகள்,விருது விழாக்கள்,வெற்றி விழாக்கள் என்று தொகுத்து வழங்கி அசத்தியிருந்தார் அர்ச்சனா.சிறந்த தொகுப்பாளினிக்கான பல விருதுகளை குவித்து அசத்தியிருக்கிறார் அர்ச்சனா.

இதனை தவிர சில படங்களில் நடித்தும் அசத்தியிருந்தார் அர்ச்சனா.அடுத்ததாக வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரில் முக்கிய போட்டியாளராக பங்கேற்று அசத்தியிருந்தார் அர்ச்சனா.பிக்பாஸ் தொடர் முடிந்த பிறகு அர்ச்சனா என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போது இவர் விஜய் டிவியில் புதிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.இதற்கான ப்ரோமோ வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.காதலர் தினத்தன்று ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முன்னணி சேனல்களில் இருக்கும் காதல் ஜோடிகளை இணைத்து விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வருகிறது.