கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து 19 வயது இளம் பெண்ணை பேருந்தில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மும்பையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கார்கர் பகுதியில் 19 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

அப்போது, அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் சில இளைஞர்களும் வசித்து வந்து உள்ளனர்.

அதன் படி, கடந்த 3 ஆம் தேதியன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு வீட்டில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. 

அப்போது, அந்த பெண்ணுக்கு 2 பேர் சேர்ந்து வெல்கம் டிரிங்ஸ் கொடுப்ப போல், கூல்ட்ரிங்ஸ் கொடுத்து உள்ளனர். அதனைக் குடித்ததும், அந்த இளம் பெண்ணுக்கும் சிறுது நேரத்திலேயே சற்று மயக்கம் வந்து உள்ளது.

இதனால், அந்த இளம் பெண்ணுக்குத் தலை சுற்றிய நிலையில், அந்த கொண்டாட்ட நிகழ்வில் இருந்து தனியாக வர முயன்று உள்ளார்.

அப்போது, அந்த பெண்ணை கண்காணித்துக்கொண்டே இருந்த அந்த இருவரும், அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு,  அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்குள் தூக்கிச் சென்று உள்ளனர். அங்குச் சென்றதும், அந்த பெண்ணிற்குத் தண்ணீர் கொடுப்பது போல், மீண்டும் மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸை கலந்து கொடுத்து உள்ளனர். 

இதனை குடித்த அந்த பெண், இன்னும் மயக்க நிலைக்குச் சென்று உள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணை, அந்த இருவரும் அந்த பேருந்தில் வைத்தே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அந்த பெண்ணை ஆசை தீர பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கேயே அப்படியே அந்த பெண்ணை விட்டு விட்டு சென்று விட்டனர்.

இதனையடுத்து, அதிகாலை நேரத்தில் மயக்கத்தில் இருந்து அந்த பெண் கண் விழித்துப் பார்த்த போது, அவர் ஆடைகள் அனைத்தும் கலைக்கப்பட்ட நிலையில், அந்த பேருந்திற்கும் மிகவும் அலங்கோலமான நிலையில் கிடந்ததைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி மீண்டும் கண்ணீர் விட்டு அழுத அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த செய்த போலீசார், அந்த பெண்ணிற்கு கூல்ட்ரிங்ஸ் கொடுத்து மயக்கமடையச் செய்து, அங்கிருந்து தூக்கிச் சென்று, பேருந்தில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த இருவரில் ஒருவனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்கனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளிகளில் ஒருவர் அந்த பேருந்தின் ஓட்டுநர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து 19 வயது இளம் பெண்ணை பேருந்தில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், மும்பையில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.