தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது, எந்த கட்சி என்று தமிழகம் முழுவதும் ஜியோன் ஆய்வு அமைப்பு என்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஒரு சர்வே நடத்தியுள்ளது. 


இந்த சர்வே முடிவுகளில், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில்  45% வாக்குகளை பெற்று, 125 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என முடிவுகள் வந்துள்ளது. இந்த சர்வே முடிவுகள் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வெளியாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 58,500 பேரை நேரில் சந்தித்து இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 

 

சென்னை, டெல்டா மற்றும் தெற்கு மண்டலங்களில் திமுகவும் மற்றும் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் அதிமுகவும் முன்னிலை பெறும் என்கிறது அந்த சர்வே. மேலும் 44% வாக்குகளுடன் 109 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகும் என சர்வே தெரிவிக்கின்றன.


இந்த சர்வேயில், பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை அதிகரித்துள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் இமேஜ், மக்களிடத்தில் அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்த நிலை தற்போது இல்லை என்றும் , மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு பெரிய அளவு உயர்ந்துள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அந்த சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.