தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் , பழனியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார்.


பழனியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது, பழனி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். முன்னராக ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தார். 


கடவுள் இல்லை என்று கூறிவந்த திமுக வேல் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலமாகவே திமுகவோடு பொய்யான நிலைப்பாடு தெரிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு பொய்யான நிலைப்பாடு இருந்தனால தான் 10 வருசம் மக்கள் ஒதுக்கி வைச்சுருக்காங்க. ஆனால் திமுக திருந்தினப்பாடு இல்லை.

இன்னும் எத்தனை பொய்களைச் சொல்லியாவது ஆட்சி வந்துடனும் துடிக்கிறார் ஸ்டாலின். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்கு வரவில்லை. அதிமுகவை குறை கூறவதற்காகவே ஊர் ஊராகத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்” என்று பேசினார்.