சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நேஹா மேனன்.இதனை தொடர்ந்து சன் டிவியில் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் நடித்து மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார்.

தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள்,தமிழ் செல்வி உள்ளிட்ட சில சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நேஹா.இவற்றை தவிர யட்சன் யட்சன்,ஜாக்சன் துரை,நாரதன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து அசத்தி இருந்தார் நேஹா.

நடிப்பிற்கு ஒரு சிறு இடைவேளை விட்டிருந்த நேஹா,சில வருடங்களுக்கு பிறகு சன் டிவியின் சித்தி 2 மற்றும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வருகிறார்.இந்த இரண்டு தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நேஹா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

சில நாட்களுக்கு முன் ஒரு சந்தோஷமான செய்தியை அறிவிக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.அதனை தற்போது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் நேஹா.தனது அம்மா பல வருடங்களுக்கு பிறகு கர்பமாக இருந்ததாகவும் தற்போது அவருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கும் அவரது அம்மாவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.