இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.சமீபத்தில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

இதனை அடுத்து இவரது சில படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களின் இயக்குனர் பொன்ராம் இயக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் குக் வித் கோமாளி புகழ் நடிக்கிறார் என்பது சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.