தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.பொங்கலை முன்னிட்டு இந்த படம் இன்று மிக பிரம்மாண்டமாக கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிக்கப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.பூஜாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.