தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் கே.பி.அன்பழகனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், ’’ ஒரு சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து கிளை செயலாளராகி எம்.எல்.ஏ-ஆவது எவ்வளவு கஷ்டம் என்று அனைவருக்கும் தெரியும். நான் படிபடிப்பாக உழைத்து முன்னுக்கு வந்தேன். ஸ்டாலின் எங்கப்போய் உழைச்சார்? அப்பா செல்வாக்கில் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆனார்.


அவுங்க அப்பா கருணாநிதியின் செல்வாக்கில் ஸ்டாலின் வந்தார். அவருடைய விலாசத்தை வைத்து இன்று தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறார். ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்தாரா அவருடைய அப்பாவின் உழைப்பால் உயர்ந்தாரா? 


நான் முதலமைச்சராகப் பதவியேற்றபின் எவ்வளவு தொந்தரவு கொடுத்தார்கள். நிம்மதியாக இருக்க விட்டார்களா. தினமும் ஒரு போராட்டத்தை அறிவிப்பார். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள். ஆனால் அத்தனை போராட்டமும் முறியடிக்கப்பட்டது. உழைக்கும் அதிமுக ஏற்றம் பெறுகிறது. உழைப்பே இல்லாத திமுக சரிந்துகொண்டிருக்கிறது. ” என்று பேசினார்.