சலீம்,தர்மதுரை உள்ளிட்ட சூப்பர்ஹிட் படஙக்ளை தயாரித்து அசத்தியவர் ஆர்.கே.சுரேஷ்.பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தின் மூலம் கொடூரமான வில்லனாக அறிமுகமானார் ஆர்.கே.சுரேஷ்.இந்த படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

தொடர்ந்து விஷால் நடித்த மருது,விக்ரமின் ஸ்கெட்ச்,சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தார்.அடுத்ததாக ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார் ஆர்.கே.சுரேஷ்.அடுத்ததாக இவர் நடித்துள்ள சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இவருக்கு கடந்த வருடம் லாக்டவுன் நேரத்தில் திருமணம் நடந்தது.லாக்டவுன் சமயம் என்பதால் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர் , வேறு யாரையும் அழைக்க முடியவில்லை என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவித்திருந்தார்.

இவரது மனைவியின் வளைகாப்பு சில நாட்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.இதில் பல பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை ஆர்.கே.சுரேஷ் மற்றும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.