லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமாவை எதிர்மறையாக எடுக்க வேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 


திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், மேற்கு வங்கத்தின் ஹோவ்ரா மாவட்டத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். 


போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினமா செய்ததை பாஜகவின் ஐடி துறை தலைவர் அமித் மால்வியா, சுக்லாவின் ராஜினாமா செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரத்தன் சுக்லாவும் பாஜகவில் இணைய போவதாக மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை கிளம்பியது. 


இதையொட்டி கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘’ யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம். லக்ஷ்மி ரத்தன் சுக்லா அவரது ராஜினாமா கடிதத்தில் விளையாட்டுக்கு அதிக நேரம் கொடுக்க விரும்புவதாகவும், அதனால் கட்சியில் எம்.எல்.ஏ.வாக தொடருவதாகவும் ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார். அதனால் இந்த ராஜினாமா விவகாரத்தை எதிர்மறையான வழியில் எடுக்க கொள்ள வேண்டாம் ” என்றுள்ளார்.