23 வயதிற்குள் 5 குழந்தைகளைப் பெற்றெடுத்த மனைவியின் கள்ளக் காதலை கண்டுபிடித்த கணவன், கொடூரமாக மனைவியை கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஒண்டிகாரன் தோட்டம் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான சுதர்சன், அவரது மனைவி 23 வயதான சத்யா என்கிற ரூனு உடன் வசித்து வந்தார்.

ஒடிசா மாநிலத்தில் இருந்து கோவைக்கு வருகை தந்த இந்த தம்பதியினர், ஒண்டிகாரன் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். 

முக்கியமாக, சீக்கிரமே திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு, மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன. 

அதே நேரத்தில், இந்த தம்பதிகள் தங்கியிருக்கும் பக்கத்து வீட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான ரஞ்சித் என்ற இளைஞர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், சுதர்சனின் மனைவி சத்யாவுக்கும், பக்கத்து வீட்டில் தங்கியிருந்த ரஞ்சித்துக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டு, அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளக் காதல் பழக்கம், நீண்ட நாட்களாக அவர்களுக்குள் இருந்துள்ளது.

இந்த விசயம் கணவன் சுதர்சனுக்கு எப்படியோ தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சுதர்சன், இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார். அப்போது. 
கள்ளக் காதலன் ரஞ்சித், சுதர்சனிடம் மன்னிப்பு கேட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் நண்பர்களாக மாறியதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, சுதர்சன், அவர் மனைவி சத்யா, பக்கத்து வீட்டு புதிய நண்பன் ரஞ்சித் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர். 

இதனையடுத்து, சுதர்சனம் சமையல் பொருட்கள் வாங்குவது தொடர்பாகக் கடைக்குச் சென்று விட்டு, வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, தனது மனைவி சத்யாவும், புதிய நண்பன் ரஞ்சித்தும் ஒன்றாக உல்லாச இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இதனைப் பார்த்து, கடும் 
அதிர்ச்சியடைந்த சுதர்சன், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து இருவரையும் சரமாரியாகத் தாக்கி உள்ளார். 

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த மனைவி சத்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன், கள்ளக் காதலன் ரஞ்சித்துக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து, பயந்து போன சுதர்சன், அங்கிருந்து தப்பி ஓடினார். அங்கு சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சத்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மயங்கிக் கிடந்த ரஞ்சித்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவியை கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய சுதர்சனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.