கடந்த டிசம்பர் மாதம், சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட ஆர்.டி.ஓ விசாரணையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில்,  எம்பிபிஎஸ் படிப்பில் சேர சீட்டு வாங்கி தருவதாக கூறி 5 கோடியே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளதாக, ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் 2015ல் ஹேம்நாத்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனால் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறுபடியும் கைது செய்து காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர்.