உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஆய்வுபணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சில நாடுகளில் பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்திருந்ததை தொடர்ந்து போர்ச்சுகீஸ் நாட்டில் முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பொதுமக்களில் சோனியா அசெவெடோவும் ஒருவர். போர்டோவில் உள்ள போர்த்துகீசிய ஆன்காலஜி இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்த சுகாதார ஊழியர் 41 வயதான சோனியா அசெவெடோ, தடுப்பூசி போட்ட பிறகு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாமல் இறந்தது உள்ளார். அசெவெடோவின் தந்தை ' என் மகள் நன்றாக தான் இருந்தாள். அவளுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை. அவளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இறப்பதற்கு முன்பு அவளுக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவளுக்கு குடிக்கும் பழக்கமும் இல்லை. வெளியிலும் உணவுகள் சாப்பிட மாட்டாள். என் மகள் எப்படி இறந்தாள் என்று எனக்கு தெரியவேண்டும். இந்த தடுப்பூசியினால் என்ன நடந்து இருக்கிறது என்று எனக்கு அரசாங்கம் விளக்கம் கொடுக்க வேண்டும் ” என்ற கூறியிருக்கிறார். சுகாதார ஊழியரின் திடீர் மரணம் குறித்து போர்த்துகீசிய மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.