மலையாள திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் ஹனி ரோஸ். கடந்த 2005-ம் ஆண்டு பாய் பிரண்ட் எனும் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். 2007-ம் ஆண்டு முதல் கனவே எனும் படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ஜீவா டபுள் ஆக்ஷனில் நடித்த சிங்கம்புலி படத்தில் இவரது ரோல் பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பிறகு மல்லுக்கட்டு, கந்தர்வன் போன்ற படங்களில் நடித்தார். 

மலையாளத்தில் அனூப் மேனன் இயக்கிய திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் த்வானி நம்பியார் என்ற இவர் கேரக்டர் பேசப்பட்டது. மலையாளத்தில், மோகன்லால் மம்மூட்டி, திலீப், சுரேஷ் கோபி, ஜெயராம் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரைப்பட நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகை ஹனி ரோஸும் சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். கேரளாவில் ஆற்றுப் பகுதியில் இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. 

சேலை கட்டியபடி, அதிகமான பாறைகள் நிறைந்த ஆற்றுப் பகுதிக்குள் நின்று போட்டோஷூட்டில் கலந்துகொண்டார் ஹனி ரோஸ். அப்போது திடீரென சேலை தடுக்கியதால், தவறி கீழே விழுந்தார். அவரை போட்டோஷூட் குழுவினர் ஓடி சென்று தூக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எச்சரிக்கையாக இருங்கள்... அப்படி எதற்கு போட்டோஷூட் என்று ஆறுதல் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

சமீபத்தில் திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் Pre Wedding போட்டோஷூட்டின் போது ஆற்றில் அடித்து தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் செல்ஃபி மோகத்தால் பல இளைஞர்கள் ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி பிடித்து உயிரிழந்தனர். தற்போது போட்டோஷூட் இப்படி ஆயிற்றே என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறையும் என்ற மூடநம்பிக்கை, கால போக்கில் உண்மையாகிவிடும் போல என கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.