கடலூர் மாவட்டம் பாரதிக்குப்பம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,''ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத முன்னுரிமை என பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க.விற்கு தைரியமிருந்தால் போட்டிக் கூட்டம் நடத்தி நாங்கள் இவ்வளவு சாதித்துள்ளோம் என்று சாதனையைச் சொல்லலாம். ஆனால் முதலமைச்சரும் அதிமுக அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ள வேதனையால் இன்றைக்கு எந்த கிராமத்திற்குள்ளும் இந்த தேர்தல் நேரத்தில் நம்மால் நுழைய முடியாது என்ற முடிவிற்கு வந்து இது போன்ற தடைகளை விதிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்வதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பர் ஒன். ஆனால் முதலமைச்சர் பழனிசாமியை அவரையும் முந்திவிட்டார்.” என்றார்