புதிய நாடாளுமன்ற கட்டுவதற்கான உரிமம் கொடுக்கப்பட்டு இருக்கும் சென்ட்ரல் விஸ்டா, பல்வேறு விதிமீறல்கள் செய்து இருப்பதாக பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுகள் மீதான விசாரணை முடியும் வரை  புதிதாக பணிகள் மேற்கொள்ளக், பழைய கட்டிடங்களை இடிக்க கூடாது , மரங்களை வெட்ட கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  


கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திட்டத்திற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றம், மேற்சொன்ன உத்தரவுகளை பின்பற்றி வேண்டும் எனவும் அதற்கான உத்தரவாதம் அளிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

இதுகுறித்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று நாடாளுமன்ற கட்டடம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.