பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் சில கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டு உள்ளது. நேற்று தண்ணீர் நிறைந்த பலூனை ஒரு கையில் தூக்கிக்கொண்டு நிற்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் பாலாஜி முதலிடம் பிடித்தார், ரியோவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

அதன் பின் இரண்டாவது டாஸ்காக கட்டையை தலையில் வைத்து நிற்க வேண்டும் என சொல்லப்பட்டது. அதில் ரம்யா முதலிடம் பிடித்தார். அதிலும் ரியோவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. இந்நிலையில் இன்று மூன்றாவதாக பாட்டு பாடும் டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதை அறிவிப்பதற்காக ரியோவை பிக் பாஸ் சத்தம் இல்லாமல் மெதுவாக கன்பெக்ஷன் ரூமுக்கு வரும்படி அழைத்து இருக்கிறார். அதை கேட்டு ரியோவே ஷாக் ஆகிவிட்டார்.

வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் எப்போதும் சீரியசாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸே களத்தில் இறங்கி இப்படி என்டர்டெயின்மெண்டாக சில விஷயங்கள் செய்து வருவது ரசிகர்களை கவர்ந்தது. இன்று நடந்த பாட்டு பாடும் டாஸ்க்கிலும் சண்டை தான் வந்திருக்கிறது. யார் முதலில் buzzer அழுத்தியது என பாலாஜி மற்றும் கேபி இடையே சண்டை நடந்து இருப்பது இன்றைய முதல் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், பாலாவுக்கும் ஆரிக்கும் இடையே புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. நீ ஆம்பள பையன் தானா...ஓடி விளையாடு என்று பாலாஜியை ஆரி கேட்க, கோபத்துடன் கிளம்பினார் பாலாஜி. இப்படி விளையாடுவதற்கு விளையாடாமலே இருக்கலாம் என்று மறுபுறம் ஆரி அமர்ந்து கொள்கிறார். இந்த இருவரின் சண்டை எப்போது தீரும் என்ற ஆவலில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.  

இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இறுதி போட்டியாளர்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள். இந்த சீசனில் சீக்ரெட் ரூம் போன்ற சுவாரஸ்யங்கள் இல்லையே என்றும் ஃபீல் செய்தனர் பிக்பாஸ் விரும்பிகள்.