நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன், ஹாலன், லீலாவதி மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு நீராதரமாக உள்ள இந்த நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 8 வருடங்களுக்கு முன்பே அதிகரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டும் , ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்து வந்தது. 


இதனால், அந்த கிராமத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது,  150 குடும்பங்களுக்கு நீராதராமாக இருக்கும் நீர் நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கடும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் என  மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 


இந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள்  நீதிபதிகள். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் , மனித இனமே அழிந்து போகும் என தெரிவித்தனர். தமிழகத்தில் ஒரு அங்குலம் நீர் நிலை பகுதி கூட ஆக்கிரமிக்க அனுமதிக்ககூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  எனவும் அறிவுறுத்தினர்.