மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார். போராட்ட களத்தில் இதுவரை 55 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பிடியை தளரத்திக்கொள்ள தயாராக இல்லை. 


விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று 7-வது கட்ட பேச்சுவார்த்தையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில்  41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டார்கள். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


அதன்பின் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் , ‘’ வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதன்பின்பு விவசாயிகள் அமைச்சர்களுடன் பேசாமல் விவசாயிகள் மவுனம் காத்தனர். 7ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து இருக்கிறது. 8-வது கட்ட பேச்சுவார்த்தையை வரும் 8-ம் தேதி நடத்த முடிவுசெய்யப்பட்டு இருக்கிறது.