3 வது காதல் தோல்வி குறித்து பிலபல நடிகை ப்ரணிதி சோப்ரா மனம் திறந்து பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகையான ப்ரணிதி சோப்ரா, தன்னுடைய 3 வது காதல் தோல்வி மற்றும் தன்னுடைய தொழில் சார்ந்த விசயங்கள் குறித்து வெளிப்படையாகப் 
பேசி உள்ளார்.

இந்தி சினிமா உலகில், பிரபல நடிகையாகவும் பாடகியாகவும், தொழில் முனைவோராகவும் வலம் வருபவர் தான் நடிகை ப்ரணிதி சோப்ரா. ஆவார். இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு பிறந்தார். சோப்ரா துவக்கத்தில் முதலீட்டு வங்கியியல் வேலை பார்க்க விரும்பினார். ஆனால் மான்செஸ்டர் வணிக பள்ளியில் நிதியியல்,வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவில் பட்டம் பெற்ற பிறகு 2009 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார். அந்த நேரம் இந்தியாவில் பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் இருந்தது, எனவே அவர் 

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக சேர்ந்த நடிகை ப்ரணிதி சோப்ரா, பிறகு அந்த நிறுவனத்தின் நாயகியாக நடிக்க 
ஒப்பந்தம் ஆனார். நடிகை ப்ரணிதி சோப்ரா தன்னுடைய முதல் திரைப்படமாக 2011 ஆம் ஆண்டில் வெளியான பெண்கள் எதிர் ரிக்கிபாய் திரைப்படத்தில் 
நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றார். 

இதனையடுத்து, காதல், வாழ்க்கை, தொழில் என்று பயணித்த அவரது வாழ்க்கையில் சில புயல்களும் வீசத் தொடங்கின.

இப்படியாக, 3 முறை காதல் முறிவினைச் சந்தித்த நடிகை ப்ரணிதி சோப்ராவிடம் நடத்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நேர்காணலில், “தற்போது உங்களது வாழ்க்கையில் யாரேனும் முக்கியமான நபர் இருக்கிறார்களா?” என்ற, கேள்வி முன் வைக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய நடிகை ப்ரணிதி சோப்ரா, “தொழிலையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சீராக கையாளும் நிறையப் பேர் இருக்கிறார்கள்” என்று, குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய நடிகை ப்ரணிதி சோப்ரா, “அவ்வளவு ஏன், அதில் நானும் ஒருவள் தான்” என்றும், குறிப்பிட்டுப் பேசினார்.

“ஆனால், காதல் வாழ்க்கையில் ஈடுபடும் போது, அதற்கு நிறைய நேரம் செலவழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதனால், சில நேரங்களில் என்னுடைய 
தொழில் முறை வாழ்க்கையில் கடின உழைப்பைக் கொடுக்க முடிவதில்லை” என்றும், அவர் கூறினார். 

இப்படிப் பேசிக்கொண்டே இருந்த நடிகை ப்ரணிதி சோப்ரா, சற்று குரல் உடைந்து பேசத் தொடங்கினார். அப்போது, “காதலினால் ஏற்படும் இடர்பாடுகளோ, அல்லது வேறு ஏதேனும் இடர்பாடுகளோ இல்லாமல் இருந்தால், நீங்கள் உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்றும் தெரிவித்தார். 

“இப்போது, அதைத் தான் நான் செய்துகொண்டிருக்கிறேன் என்றும், எனது திரைப்படங்களால் நான் உத்வேகம் அடைந்துள்ளேன்” என்றும், மீண்டும் உற்சாகம் அடைந்தார். 

மேலும், “நான் எனது அடுத்த திரைப்படத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“காதல் மீது எனக்கிருந்த நம்பிக்கையை நான் இழந்திருந்தாலும், மீண்டும் எனக்கேற்ற நல்ல துணை அமைந்தால், அதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அந்த உறவைத் தொடர்வதற்குத் தயாராகத் தான் உள்ளேன்” என்றும், அவர் தெரிவித்தார். 

குறிப்பாக, “நான் எதற்கும் நோ சொல்லவில்லை என்று தெரிவித்த அந்த நடிகை, ஒரு வேளை நல்ல துணையாக ஒருவர் என்னோடு பயணிக்கும் பட்சத்தில், நிச்சயமாக நான் அதனை வரவேற்பேன் என்றும், ஆனால் சமீபகாலமாக நான் அப்படி யாரையும் கண்டுபிடிக்கவில்லை” என்றும், நடிகை ப்ரணிதி சோப்ரா, தெரிவித்தார். நடிகை ப்ரணிதி சோப்ராவின் இந்த பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது.