இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆன மொயீன் அலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் ஒரு குறிபிட்ட ஸ்பான்சர் சின்னத்தை நீக்குமாறு கூறியுள்ளார்.

14 வது ஐபிஎல் தொடர் வருகின்ற 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் சில  அணிகள் தங்களது அணிக்கான ஜெர்சியை மாற்றி உள்ளன.இந்தநிலையில் சென்னை அணியும் அதன் ஜெர்சியை மாற்றி உள்ளது. சென்னை அணிக்காக இந்த இவருடம் களம் இறங்கும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலி புதிய ஜெர்சியை அணியமாட்டேன் என்று கூறியுள்ளார். அதில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஸ்பான்சர் சின்னத்தை நீக்குமாறும் நிர்வாகத்திடம்  கூறியுள்ளார்.


மொயீன் அலி ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், அதன்மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக அவர் மது அருந்துவதில் இருந்து சற்று விலகியே உள்ளார். மேலும் இதுவரை மொயீன் அலி எந்த விளையாட்டின் போதும் அவர் அணியும் ஜெர்சியில் ஆல்கஷால் பிராண்டுகளின் சின்னங்களை ஆதரிக்கவில்லை. அது இங்கிலாந்து அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி. 

moeen ali


சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் எஸ்.என்.ஜே 10000 சின்னம் இடம்பெற்றுள்ளது. சென்னையை தளமாக கொண்ட எஸ்.என்.ஜே டிஸ்டில்லரிகளின் தயாரிப்பு பிராண்டாகும். இதனால் ஜெர்சியை அணிவதில் உடன்பாடு இல்லை என்பதை நிர்வாகத்திடம் மொயீன் அலி கூற, அதை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது. பின்பு போட்டியின் போது அவர் அணியும் ஜெர்சியில் இருந்து லோகோவை நீக்கியும் உள்ளது. 


 கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் 33 வயதான மொயீன் அலியை சென்னை அணி 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதற்கு முன்னதாக மொயீன் அலி 2018 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.தற்போது இந்த வருடம் சென்னை அணியோடு அவரது பயணத்தை தொடர்கிறார். 


 கடந்த மாதத்தில் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் தலமையில் விளையாடுவது குறித்து பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலானது. தோனியின் தலைமையில் விளையாடிய வீரர்களுடன் நான் பேசியுள்ளேன், தோனி ஒவ்வொருவரின் விளையாட்டையும்  எப்படி மேம்படுத்துவார் என்று கூறியிருக்கிறார்கள். ஒரு சிறந்த கேப்டனான தோனியும் அதை செய்வார் என்று நம்புகிறேன் என  மொயீன் அலி கூறியதை சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வமான பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.


3 முறை சாம்பியன் பட்டத்தையும், 5 முறை ரன்னஅப் பட்டத்தையும் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் டெல்லி அணியும், சென்னை அணியும் மோதுகின்றன. 2021 ஐபிஎல் தொடரில் மிகவும் இளம் கேப்டனாக டெல்லி அணியின்  ரிஷப் பண்ட்டும் , அதிக வயதான கேபடனாக சென்னை அணியின் தோனியும் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.