தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இவர் நடித்த ஹீரோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.அடுத்ததாக புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் தயாராகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார்.இவர் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று திரைக்கு வரவுள்ளது.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சும்மா கிழி என்ற புதிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவர் தனது மகள் ஆராதனவுடன் சமீபத்தில் பேருந்தில் சென்றுள்ள சில புகைப்படங்கள் பகிரப்பட்டன.இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.