சோசியல் மீடியா காதலனைத் தேடி, ஹைடெக் காதலி ஒருவர், கிராமத்திற்கே தேடிச் சென்ற நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் தான் இப்படி ஒரு ஆச்சரிய நிகழ்வு, அனைவரையும் அசந்துபோய் பார்க்கச் செய்திருக்கிறது.

சமூக மாற்றங்களிலும் காதலும் மாற்றமடைந்திருக்கிறது. இது டிஜிட்டல் யுகம் என்பதால், இங்கே பல டிஜிட்டல் காதலும் மலரத் தொடங்கியிருக்கிறது.

இப்படியான டிஜிட்டலில் மலரும் பல காதல்களும், பெரும் பாலும் மோசடிகளையே சந்தித்துக்கொண்டு வந்த நிலையில், தற்போது அது பெய் என்று நெற்றிப் பொட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறது, இந்த பீகாரைச் சேர்ந்த நிஜ காதல் ஜோடி. 

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடியினர் யாரென்றால், “முகமது சதாம் - ஆயிஷா” ஆகியவர்களே ஆவர். 

இவர்கள் இருவரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக அறிமுகம் ஆகி உள்ளனர். தொடக்கத்தில் இருவரும் ஒவ்வொருவரின் பதிவுக்கு தங்களது வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவித்துக்கொண்டு வந்த நிலையில், இருவரும் நண்பர்களாக மாறினார்கள்.

இதுவே, நாளடைவில் இவர்களின் நட்புப் பயணம் காதலாக மாற காரணமாக அமைந்துபோனது. இப்படியாக இவர்களது நட்பும், நட்பு காதலாக மாறியதும் வெறும் 5 மாத காலங்கள் மட்டுமே ஆகும்.

அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் இளம் பெண் ஆயிஷா, வசித்து வந்தார். ஆயிஷாவின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக சமூகத்தில் பெரிய இடத்தில், பெரிய அந்தஸ்தில் வளர்ந்து வந்தவர். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஆனால், காதலன் முகமது சதாம், பீகார் மாநிலம் பாட்னா அருகில் உள்ள அரரியா கிராமத்தில் வசித்து வந்தார். இப்படியான நிலையில் தான், அவர்களுக்குள் சோசியல் மீடியாவில் காதல் மலர்ந்து இருக்கிறது.

ஒரு கட்டத்தில், தனது காதலனைப் பார்க்க முடியாமல் தவித்து வந்த ஆயிஷா, அவரை நேரில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் படி, “தனது காதலனை வீட்டில் சொன்னால், தனது பணக்கார குடும்பத்தினர், தன்னுடைய ஏழை காதலனை எப்படியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று, நினைத்துக்கொண்டு தனது வீட்டில் அதனைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்.

இது தொடர்பாகத் திட்டமிட்ட அந்த இளம் பெண் ஆயிஷா, தனது பெற்றோரிடம் கூட எதுவும் தெரிவிக்காமல், தனது சோசியல் மீடியா காதலன் முகமது சதாமை தேடி, பீகாரில் உள்ள அரரியா கிராமத்திற்கு வந்திருக்கிறார்.

இதனால், அந்த கிராமமே அந்த வசதி வாய்ப்பு படைத்த இளம் பெண் ஆயிஷாவை வியந்து பார்த்து உள்ளார்.

அதே நேரத்தில், காதலினிடம் பேசி உறவாடிய அந்த இளம் பெண் காதலி, காதலனை விட்டு பிரிய மனம் இல்லாமல், தவித்து உள்ளார். அத்துடன், “இந்த காதல் விசயத்தில் நிச்சயம் தனது வீட்டில் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்” என்பதை நன்கு அறிந்த இளம் பெண் ஆயிஷா, தனது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல மனமின்றி, காதலன் முகமதுடன் அவரது வீட்டிலேயே தங்கி உள்ளார்.

இந்த தகவல் அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் குமார் மண்டலுக்கு தெரிய வந்த நிலையில், அவர் காதல் ஜோடி இருவரையும் அழைத்துப் பேசி இருக்கிறார். 

இந்த பேச்சு வார்த்தையில், “இளம் பெண் ஆயிஷாவுக்கு தன்னுடைய விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளும் வயது வந்து விட்டதை” அறிந்த அவர், இருவருக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்தார். 

இதனிடையே, “காதலனுடன் சேருவதற்காக, ஒரு பெரிய பணக்கார விட்டு பெண் ஒருவர், உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் இருந்து, பீகார் மாநிலத்திற்கு வந்து தனது காதலனை திருமணம் செய்துகொண்டு, ஒரு ஏழ்மையான வாழ்க்கை வாழும் சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.