கடந்த 2009-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். அவர் நடிக்க வந்து 12 ஆண்டுகளாகிவிட்டாலும், இன்னும் இளம் ஹீரோயினாக இருப்பதே அவரது ரகசியம். தன்னை தேடி வரும் படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த். 

தற்போது அவர் தியாகராஜன் இயக்கி வரும் அந்தகன் படத்தில் பிரசாந்துடன் நடித்து வருகிறார். பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன். அந்த படத்தை முதலில் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தார். அவர் விலகவே ப்ரட்ரிக் இயக்குவார் என்றார்கள். அவரும் விலகவே தியாகராஜனே இயக்கி வருகிறார்.

தற்போது ப்ரியா ஆனந்த் வெளியிட்ட வீடியோவில், காருக்குள் அமர்ந்து குழந்தையை கட்டிப்பிடித்து விடாமல் முத்தம் கொடுத்துள்ளார் ப்ரியா ஆனந்த். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலரோ, அந்த சிறுமியின் இடத்தில் நான் இருக்கக் கூடாதா என்று கேட்டுள்ளனர். ப்ரியா வெளியிட்டுள்ள வீடியோவை பலரும் லைக் செய்துள்ளனர். குழந்தைகள் என்றால், யாருக்கு தான் பிடிக்காது. 

கெரியரை பொறுத்தவரை அவர் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவாவுடன் சேர்ந்து சுமோ படத்தில் நடித்துள்ளார். முன்னதாக வணக்கம் சென்னை படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இது தவிர்த்து அவர் ஆர்.ஜே.பாலாஜியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ரூ. 29 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 220 கோடி வசூல் செய்த பதாய் ஹோ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் பாலாஜியுடன் நடிக்கிறார் ப்ரியா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Anand (@priyawajanand)