வித்தியாசம் என்ற பெயருக்கு மறுவார்த்தையாக தமிழ் தொலைக்காட்சிகளில் வலம் வருவது விஜய் டிவி.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.

மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.பிக்பாஸ்,ஜோடி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களையும் புதுமையான பல நிகழ்ச்சிகளையும் தற்போது வரை கொடுத்து வருகிறது விஜய் டிவி.விஜய் டிவியின் மற்றுமொரு முக்கிய அம்சம் தொடர்கள்.

விஜய் டிவி பல வெற்றி தொடர்களை தந்து ரசிகர்களிடம் விஜய் டிவி தொடர்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.தற்போதும் விஜய் டிவியின் தொடர்கள் TRP-யில் கலக்கி வருகின்றன.விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று அன்புடன் குஷி.சின்னத்தம்பி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த தொடரில் முதலில் ஹீரோயினாக நடித்தவர் விலக ரேஷ்மா வெங்கடேஷ் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இந்நிலையில் தற்போது இந்த தொடரில் இருந்து ரேஷ்மா விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவருக்கு பதிலாக அவளும் நானும் தொடரில் நடித்த மௌனிகா நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது,ஆனால் மௌனிகா சன் டிவியில் ஒரு சீரியலில் இணைந்துள்ளதால் இந்த சீரியலில் நடிக்கமாட்டார் என்பது தெரியவந்துள்ளது.ரேஷ்மா விலகியது எந்த அளவு உண்மை என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.