பாஜகவை சேர்ந்தவரின் மனைவி 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வாங்க மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி, அனைத்து கட்சியினரையும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

மேற்கு வாங்க மாநிலம் நந்திகிராமில் பகுதியைச் சேர்ந்த பாஜக கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர், தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்தார். 

அதே நேரத்தில், அங்கு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரம் அங்கு குறிப்பிட்ட பாஜகவை சேர்ந்த ஒருவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அவர், அந்த பகுதியில் உள்ள மற்ற கட்சியினரைத் தாக்கி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மற்ற கட்சியினர் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

இப்படியான நிலையில், சம்மந்தப்பட்ட அந்த பாஜக பிரமுகர் கடந்த வாரம் அங்கு நடக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தனது கட்சியினரோடு வெளியில் சென்று விட்டார். இதனை அறிந்துகொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், இப்படியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரை பழிவாங்கும் விதமாக, அவருடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது.

அதன் படி, கடந்த 29 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று குறிப்பிட்ட பாஜக பிரமுகர் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற நேரம் பார்த்து, அவரது வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்து உள்ளார். 

அந்த நேரம் பார்த்து அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அந்த பகுதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள், அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அப்போது, அந்த பாலியல் வெறிபிடித்த மிருகங்கள் வேட்டையாடி விதத்தில், அந்த பெண் அங்கேயே மயங்கி விட்டார். இதனால், அந்த பெண் இறந்துவிட்டார் என்று நினைத்த அந்த கும்பல், மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ள குளத்தில் வீசி விட்டுச் சென்று விட்டனர். 

இப்படியான நிலையில், சம்மந்தப்பட்ட அந்த பாஜக பிரமுகர் வீடு திரும்பி உள்ளார். வீட்டில், பொருட்கள் எல்லாம் அலங்கோலமாகக் கிடந்ததைப் பார்த்து சற்று அதிர்ச்சியடைந்த அவர், மனைவி வீட்டில் இல்லாததைப் பார்த்துப் பீதியடைந்து, “ஏதோ நடந்திருப்பதை” உணர்ந்து உள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவியைத் தேடி அந்த பகுதி முழுவதும் அவர் அலைந்து திரிந்து உள்ளார். அப்போது, அவரின் மனைவி அங்குள்ள குளத்தில் மிதப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். 

இதனால், அழுது துடித்த அந்த நபர், உடனடியாக தனது மனைவியை அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதித்தார். அங்கு, அந்த பெண்ணுக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு பிறகு, அந்த பெண்ணிற்கு மயக்கம் தெளிந்து உள்ளது.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையைப் பற்றி புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, பாஜகவை சேர்ந்தவரின் மனைவி 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.