தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை ராஷி கண்ணாவின் திரைப்பயணத்தில் இமைக்கா நொடிகள் திரைப்படம் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

சமீப காலமாக உடல் எடையை குறைத்து வந்த ராஷி கண்ணா, தொடர்ந்து போட்டோஷூட் என அசத்தினார். இப்படி ஒரு நிலையில் கோவாவில் நீச்சல் குளத்திற்கு அருகில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

ராஷி கண்ணா கைவசம் அரண்மனை 3 மற்றும் துக்ளக் தர்பார் திரைப்படம் உள்ளது. சுந்தரி.சி இயக்கிய அரண்மனை 3 படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். பார்த்திபன் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.