'அசோசம் நிறுவன வாரம் 2020' நிகழ்வில், ‘ நூற்றாண்டின் அசோசம் தொழில்முனைவோர் விருதை' ரத்தன் டாட்டாவுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.  


” கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்முனைவோர் நாட்டில் இருக்கிறார்கள். பெண்களுக்கும், இளம் திறமையாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் அளித்தல், உலக அளவில் உள்ள சிறந்த நடைமுறைகளை வேகமாகப் பயன்படுத்தி  சீர்திருத்தங்களை செய்து வேண்டும். வான் அளவிற்கு தொழில்துறையினருக்கு முழு சுதந்திரம் இந்தியாவில் இருக்கிறது.  இந்த வாய்ப்பை தொழில்முனைவோர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 


கொரோனா காலத்திலும் உலகம் முழுக்க முதலீட்டுக்குப் பிரச்னைகள் இருந்த நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக நேரடி அந்நிய முதலீடு மற்றும் பி.எப்.ஐ. மூலம்  அதிகபட்ச முதலீடுகள் வந்துள்ளன. இது ஒரு சாதனையே.  உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

அதேபோல், உள்நாட்டு முதலீடுகளையும் அதிகரிக்க வேண்டும். தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இனிமேல் வர கூடிய ஆண்டுகளில் புதிய தற்சார்பு இந்தியாவை உருவாக்க முழு சக்தியையும் பயன்படுத்துங்கள். உங்களுக்கு உதவ அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.