தங்கள் குட்டியை நாய்கள் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, 250 நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
 
அதாவது, மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள லலூல் கிராமத்தில், சிறு குட்டியாக இருக்கும் போதே இந்தப் பகுதியில் 2 குரங்குகள் வளர்ந்து வந்தன. 

இதனால், அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் இந்த இரு குரங்குகளும் நன்றாக பழக்கிப்போனது. 

சமீபத்தில் இந்த குரங்குகளின் குட்டி ஒன்றை சில நாய்கள் கடித்துக் கொன்று விட்டன. 

இதனால், கடும் கோபம் அடைந்த இந்த இரு குரங்குகளும், அந்தப் பகுதியில் எங்கு நாய்க்குட்டிகள் தென்பட்டாலும் அவற்றை, அருகில் உள்ள மலை அல்லது உயரமான இடத்துக்குத் தூக்கிச் சென்று, அங்கிருந்து கீழே போட்டு கொன்று குவித்து வந்திருக்கின்றன. 

இப்படியாக, கடந்த சில நாட்களாகவே கிட்டதட்ட 250 நாய்க் குட்டிகளை இந்த இரு குரங்குகளும் கொன்று உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியாக, நாய் குட்டிகளை காணவில்லை என்று முதலில் தேடிய அந்தப் பகுதியினர், அதன் பிறகு இந்த குரங்குகள் தூக்கிச் சென்று கொல்வதை கண்டுப் பிடித்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

குறிப்பாக, ஒரு குரங்கு குட்டியை கொன்றதற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக குரங்குகள் இரண்டும் இப்படி பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியதை கவனித்த அந்த பகுதியினர் உனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

இது குறித்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், நாய் குட்டிகளை கொன்று குவித்து வந்த 2 குரங்குகளையும் கூண்டு வைத்து பிடித்தனர்.

இதனைடுத்து, பிடிக்கப்பட்ட அந்த இரு குரங்குகளையும், அந்த பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் கொண்டுச் சென்று விட்டு உள்ளனர்.

ஆனாலும், இந்த சம்பவம் பற்றி பீட் மாவட்ட வன அதிகாரி சச்சின் கண்ட் பேசும் போது, “2 குரங்குகள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது, எங்களுக்கே வியப்பாக இருக்கிறது.

“நாக்பூர் வன அதிகாரிகள் அவற்றை பிடித்து அங்குள்ள காட்டுக்குள் விட்டு உள்ளனர். கடந்த 2 மாதங்களில் இந்த பகுதியில் சுமார் 250 நாய்க்குட்டிகளை இந்த குரங்குகள் கொன்றிருப்பது எங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது” என்று, அவர் தெரிவித்து உள்ளார்.