பெண்ணும் பெண்ணும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட சம்பவம், இரு பெண்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆணும் - பெண்ணுமே திருமணம் செய்துகொண்டு, குடும்பம் என்ற அமைப்பில் வாழ முடியும் என்பது, இந்தியாவின் கலாச்சார பண்பாடாக காலம் காலமாக இருந்து வருகிறது.

ஆனால், தற்போதைய இந்த நவீன காலத்தில் இந்த இயற்கையை விதியை முறியடித்து, செயற்கையாக வாழ பலரும் முற்பட்டு வருகிறோம்.

அந்த வகையில் தான், ஆண்களை திருமணம் செய்து கொள்வதை விரும்பாத இரு பெண் டாக்டர்கள், காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ளும் விதமாக, அவர்கள் தங்களுக்குள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அதாவது, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 25 வயதான பரோமிதா முகர்ஜி - 26 வயதான சுரபி மித்ரா ஆகிய இரு பெண்களுமே டாக்டர்களான பணியாற்றி வருகின்றனர்.

இந்த இரு பெண்களுமே, மஹாராஷ்டிரா மாநிலத்தில் சொந்தமாக க்ளினிக் வைத்து நடத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில், இந்த இரு பெண் டாக்டர்களுக்கும் ஆண்களை பிடிக்கவில்லை. இதனால், பெண் டாக்டர்கள் இருவரும், அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்திருக்கிறார்கள். 

அப்போது, அவர்கள் இருவருமே தாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, இது பற்றி தங்களின் பெற்றோரின் சம்மதம் வேண்டி இருவருமே தங்களது வீட்டில் பேசி உள்ளனர்.

அதன்படி, முகர்ஜி என்ற பெண், “நான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக” தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இதனைக் கெட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். பின்னர், அவரை மயக்கத்திலிருந்து எழுப்பி அவரை தேற்ற முயன்றுள்ளார்.

இதனையடுத்து, இந்த திருமணம் விசயம் பற்றி, தனது தந்தையிடம் பேசிய அந்த பெண், இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மற்றொரு பெண் டாக்டர் சுரபி, இந்த திருமணம் பற்றி தனது பெற்றோரிடம் கூறியதும், அவர்கள் இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், சிறுது நேரத்திலேயே எந்த எதிர்ப்பும் தெரிவித்க்காமல், இந்த திருமணத்திற்கு சம்மதம் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த இரு பெண் டாக்டர்களும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன்படி, அந்த இரு பெண் டாக்டர்களும், விரைவில் கோவாவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம், இந்தியாவில் பெரும் வைரலாகி வருகிறது.