மாணவிகள் முன்பு பைக் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவ களுக்கு முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்த இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தங்களது பேருந்துக்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து உள்ளனர்.

அப்போது, அந்த வழியாக சொகுசு இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், பேருந்துக்காக காத்திருந்து அந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் முன்பு திடீரென்று பைக் சாகசத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அதாவது, காரைக்குடி கல்லூரி சாலையில் வைக் சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களும், அதன் தொடர்ச்சியாக, அங்கள்ள கோட்டையூர் பகுதிக்குச் சென்று, அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் முன்பாக திடீரென்று சாகசம் செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதில் ஒரு இளைஞன் எதிர்பாரத விதமாக சருக்கு கீழே விழுந்துள்ளான்.

ஆனால், அந்த இளைஞன் கீழே விழும் பொழுது, அதிர்ஷ்டவசமாக எதுவும் ஆகாமல் உயிர் தப்பினார். 

எனினும், பைக் சாகம் செய்த இளைஞன் எதிர்பாரத விதமாக கீழே விழுந்ததை நேரில் பார்த்துக்கொண்டு பேருந்துக்கு காத்திருந்த மாணவிகள் மற்றும் பயணிகள் சத்தம் போட்டு சிரித்து விட்டனர்.

மேலும், அந்த இளைஞன் பைக் சாகசத்தின் போது கீழே விழுந்ததை அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது, இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாக பரவி வருகிறது. 

குறிப்பாக, பைக் சாகசத்தில் ஈடுபட்ட இந்த இரு இளைஞர்கள் குறித்து, காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் மற்றும் பள்ளத்தூர் போலீசாரும் சேர்ந்து அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தியும், தேடியும் வருகின்றனர்.