கல்யாணத்திற்கு பெண் தேடும் ஆண்களை குறைவைத்து ஒரு மோசடி கும்பல், கிட்டதட்ட 50 மாப்பிள்ளைகளை ஏமாற்றி பணம் பறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுனில், அங்கள்ள பாலக்காட்டை சேர்ந்த 24 வயதான சபிதா, 26 வயதான தேவி, 31 வயதான கார்த்திகேயன் என இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த மாதம் அங்கு வரும் ஒரு தமிழ் பத்திரிகையில் “மணமகன் தேவை” என்று, விளம்பரம் செய்திருந்தார்கள்.

குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில் வந்த செல்போன் நம்பருக்கு சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தொடர்பு கொண்டு, “தனக்கு கல்யாணத்திற்கு பெண் தேவை” என்று, கூறியிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த அந்த 4 பேர் சேர்ந்த கும்பல், “கேரள மாநிலம் பாலக்காடு கொழிஞ்சாம்பாறை வந்து கல்யாண பெண்ணை பார்த்து விட்டு செல்லுங்கள்” என்று, அவர்கள் அழைத்து உள்ளனர்.

அதன்படி, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பெண் பார்க்க அவர் கேரளாவிற்கு புறப்பட்டு சென்று, பெண்ணையும் பார்த்திருக்கிறார்.

அதன்படி, திருமணம் செய்துகொள்ள இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த வாரம் அந்த 4 பேரும், கொழிஞ்சாம்பாறை வாருங்கள் 12 ஆம் தேதி திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று, தேதியும் குறிப்பிட்டு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த தேதியில் சேலத்தில் இருந்து மணிகண்டன், கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதிக்கு சென்றிருக்கிறார்.

அவருடன் அவரது நண்பர்களும் சிலர் வந்திருக்கிறார்கள். அதன்படி, கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள ஒரு கோயிலில் வைத்து அவர்கள் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

திருமணம் முடிந்ததும், மணப்பெண் சபிதாவை, சேலத்திற்கு தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக மாப்பிள்ளை மணிகண்டன் கூறியிருக்கிறார்.

அதற்கு கார்த்திகேயன் மற்றும் அங்கிருந்து மற்ற இருவர், “பெண்ணுக்கு ஊர் புதியது என்பதால், ஒருநாள் மட்டும் நாங்களும் கூட வந்து அங்கு வந்து இருக்கிறோம்” என்று, கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.

அதன்படியே, மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற அவர்கள், “பெண் பார்த்து திருமணம் நடத்தி வைத்த கமிஷன் தொகை ஒன்றரை லட்சம் ரூபாய் வேண்டும்” என்று, அதில் ஒருவர் கேட்டிருக்கிறார். 

அதற்கு, மணிகண்டனும் சம்மதித்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை, கார்த்திகேயனிடம் கொடுத்திருக்கிறார்.

அதன்படி, மறுநாள் காலையில் சவிதாவின் தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் அவர் உயிரிழந்துவிடுவார் என்றும், இதனால் அவர் தனது மகளைப் பார்க்க வேண்டும் என்று சபீதாவின் தாயார் விரும்புகிறார்” என்றும். கூறி சதீதாவை தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று, அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இதனை நம்பிய மாப்பிள்ளை மணிகண்டன், இறக்கப்பட்டு “சரி, அழைத்துப் போங்கள்” என்று, கூறி தனது மனைவியை அவர்களுடன் அனுப்பி வைத்திருக்கிறார். 

அதன்படி, சபீதாவை அழைத்துச் சென்றவர்கள் அதன் பிறகு அவர்களிடம் இருந்து மணிகண்டனை அவர்கள் தொடர்பு கொள்ளவே இல்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த புது மாப்பிள்ளை மணிகண்டன், அவர்களை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும், அவர்களது போன்  ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு இவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. 

இப்படியாக, தனது புது மனைவி சென்று ஒரு வாரம் ஆகியும் மனைவி திரும்பி வராததால், மாப்பிள்ளை மணிகண்டனுக்கு சந்தேகம் வந்து  கொழிஞ்சாம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்களின் போன் நம்பரை வைத்து தேடி உள்ளனர். 

அத்துடன், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், புது மனைவி சபிதா உள்பட அவர் உடன் இருந்த பெண் மற்றும் இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், கல்யாணத்திற்கு பெண் தேடும் ஆண்களை குறைவைத்து, கிட்டதட்ட 50 மாப்பிள்ளைகளை அவர்கள் ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அவர்கள் 4 பேரையும் அங்குள்ள சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.