இளைஞரை வீடியோ காலில் அழைத்த இளம் பெண் ஒருவர், ஆபாசமாக தோன்றி இளைஞனிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதள மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, அந்த பகுதியில் ஏற்கனவே நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் செல்போன் வாட்ஸ்ஆப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, நாய் வாங்க 10 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருந்தார். ஆனால், அவருக்கு நாய் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக, 10 ஆயிரம் ரூபாய் அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், தற்போதும் அதே பாணியில் மேலும் 3 மோசடிகள் அங்கு அடுத்தடுத்து அரங்கேறி அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு வீடியோ அழைப்பு வந்திருக்கிறது.

அப்போது, அந்த போனை எடுத்து குறிப்பிட்ட அந்த இளைஞர் பேசியிருக்கிறார். அதன்படி, எதிர் முனையில் பேசிய, ஒரு இளம் பெண் அந்த வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி இருக்கிறார். 

இதனை சற்றும் எதிா்பார்க்காத அந்த இளைஞர், சற்று சுதாரிப்பதற்குள் அந்த இளைஞரின் வீடியோ அழைப்பை அந்த பெண் பதிவு செய்து கொண்டிருக்கிறார். 

அதன் பிறகு, அந்த வீடியோவில் இருந்த அந்த இளைஞரையும், இந்த பெண்ணையும் ஆபாசமாக சித்தரித்து அதே பெண் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கி இருக்கிறார்.

அப்படி, “பணம் கொடுக்கவில்லை என்றால், இந்த வீடியோவை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்றும், அந்த பெண் மிரட்டி இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், என்ன செய்வது என்று தெரியாமல், இந்த சம்பவம் குறித்து நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று, செல்போனில் வேறு வேறு விதமாக அடுத்தடுத்து அப்பகுதியில் 3 மோசடிகள் அரங்கேறி இருக்கின்றன.

இதனிடையே, செல்போன் மூலமாக தொடர்ந்து அப்பகுதியில் மோசடிகள் அதிகரித்து வருவது, கன்னியாகுமரி மக்களிடையே, அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால், “இது போன்று மோசடிகள் அடிக்கடி நடப்பதால், பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.