தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.அப்படி விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறியுள்ளனர்.

இதன் இரண்டாவது சீசன் லாக்டவுன் செம ஹிட் அடித்தது.இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன்விரைவில் தொடங்கவுள்ளது.மூன்றாவது சீசனுக்கான முதல் அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர இன்னும் சில புது என்ட்ரி கோமாளிகள் இருப்பார்கள் என்று தெரிகிறது.யார் தொகுத்து வழங்கப்போகின்றனர்,குக் யார் யார்,ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.