தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சதீஷ் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள கணம் திரைப்படத்தில் நடிகர் சர்வானந்த் உடன் இணைந்து நடித்துள்ளார். அதில் வெளிவந்த கணம் படத்தின் டீசர் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

 இதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக அசத்திய நடிகர் சதீஷ் கதாநாயகனாக களமிறங்கி கலக்கியுள்ள திரைப்படம் நாய் சேகர். பல நடிகர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ள நாய் சேகர் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

நாய் சேகர் படத்தில் நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நாய் சேகர் திரைப்படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா கதாநாயகியாக நடிக்க நடிகர்கள் மனோபாலா & லிவிங்ஸ்டன் ஆகியோருடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ள நாய் சேகர் படத்திற்கு அஜீஷ் இசை அமைத்துள்ளார்.

நாய் சேகர் திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், ராக்ஸ்டார் அனிருத் இசையில், நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய எடக்கு மடக்கு எனும் நாய் சேகர் படத்தின் பாடலும் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நாய் சேகர் திரைப்படத்தின் முழு சென்சார் அறிக்கை தற்போது வெளியானது. 

கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக வெளிவர இருக்கும் நாய் சேகர் திரைப்படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும்படியான “U” சான்றிதழ் சென்சாரில் வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் நாய் சேகர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.